நத்தம் அருகே வினோத எறும்புகள் :விலங்குகளை கொல்வதால் மக்கள் பீதி
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் வனவிலங்குகளை கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளனர். \


மலை அடிவார கிராம மக்கள் வீடுகளை காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்கின்றனர். கரந்தமலையை சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் புதிய வகை வினோத எறும்புகள் பரவின.
நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் பரவின. தற்போது சுற்று கிராமப் பகுதிகளிலும் பரவ தொடங்கி உள்ளது. மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இவை கண்களை மட்டுமே பதம்பார்க்கின்றன. உடலில் ஏறுவதால் அலர்ஜி ,கொப்பளங்கள் ஏற்படுகின்றன.

இந்த எறும்புகளால் வனப்பகுதியில் உள்ள பாம்பு, முயல் போன்ற வனவிலங்குகள் பல இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். காட்டு மாடு போன்ற பெரிய வன விலங்குகளின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாக கூறுகின்றனர். விவசாயிகளின் கால்நடைகளின் கன்றுகளை கொல்கின்றன. எறும்புகள் பரவி உள்ள மயைடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடி பெயர்கின்றனர்.



நாங்களே கண்டதில்லை



முத்துச்சாமி, வனவர், வனத்துறை,கரந்தமலை: இது புதுவகையான எறும்பாக உள்ளது. இது போன்ற வகை எறும்புகளை இதுவரை நாங்களே கண்டதில்லை. இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால் வன உயிரினங்கள் அழிகின்றன, என்றார்.சங்கமுத்து, கால்நடைதுறை டாக்டர் நத்தம்: இப்படி ஒரு எறும்பு இருப்பது தெரியவில்லை .இதுதொடர்பாக ஆய்வு செய்யப்படும்,என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X