அசாமில் ரூ.5,500 கோடியில் மின் திட்டம்: 6வது மாநிலத்தில் கால் பதித்தது என்.எல்.சி., நிறுவனம் | கடலூர் செய்திகள் | Dinamalar
அசாமில் ரூ.5,500 கோடியில் மின் திட்டம்: 6வது மாநிலத்தில் கால் பதித்தது என்.எல்.சி., நிறுவனம்
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 
Latest district News

நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம் அசாம் மாநிலத்தில் 5,500 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.


கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உதயமான என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தமிழகத்தின் பிற பகுதிகள், ராஜஸ்தான், உ.பி., ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளிலும் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் தனது துணை நிறுவனமான, என்.எல்.சி., தமிழ்நாடு மின் நிறுவனத்தின் வாயிலாக இயக்கப்படும் மின் நிலையத்தையும் சேர்த்து, மணிக்கு மொத்தம், 60 லட்சத்து, 61 ஆயிரம் யூனிட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்கி வருகிறது.

அடுத்த கட்டமாக, வடகிழக்கு மாநிலமான அசாமில், 5,500 கோடி ரூபாய் செலவில், 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் திட்டங்களை அமைக்க, ஒரு கூட்டு நிறுவனத்தை என்.எல்.சி., இந்தியா நிறுவனம், அசாம் மாநில மின் விநியோக நிறுவனத்துடன் இணைந்து தொடங்க உள்ளது.
இந்நிறுவனத்திற்கான மூலதனத்தில், 51 சதவீதத்தை என்.எல்.சி., இந்தியா நிறுவனமும், எஞ்சிய, 49 சதவீதத்தை, அசாம் மாநில மின் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான அம்மாநில மின் விநியோக நிறுவனமும் வழங்க உள்ளன.இந்த புதிய கூட்டு நிறுவனத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தம், அசாம் மாநில தலைநகர் திஸ்பூரில் உள்ள தலைமைச் செயலகமான ஜனதா பவனில் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைகளுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், என்.எல்.சி., இந்தியா நிறுவன, திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன் ரெட்டி மற்றும் அசாம் மின் வினியோக நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஆரிப்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் அசாம் மாநில சுரங்கம் மற்றும் மின்துறை அமைச்சர் நந்திதா காரிலோசா, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார், சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திரா சுமன் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X