மருத்துவ மாணவர் தற்கொலை; பிறந்த நாளில் சோக முடிவு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மருத்துவ மாணவர் தற்கொலை; பிறந்த நாளில் சோக முடிவு
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 
Latest district News

விருதுநகர் : விருதுநகர் விக்னேஷ் காலனியில் விடுமுறைக்கு வந்த மருத்துவ மாணவர் தனது பிறந்த நாளில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு அக்ரஹாரம் தெருவில் மருத்துவமனையும், மருந்துக் கடையும் நடத்துபவர் ஆனந்தராஜ் 48, இவரது மூத்த மகன் லோகேஷ் 22, கிர்கிஸ்தான் ஜாலாலாபாத்தில் உள்ள பல்கலையில் மருத்துவம் 3ம் ஆண்டு படித்தார்.விடுமுறைக்கு ஜூன் மாத இறுதியில் விருதுநகர் வந்த இவருக்கு ஆக.10ல் பிறந்த நாள். இந்த விழாவை விமர்சையாக கொண்டாட விரும்பி பெற்றோரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் எளிமையாக நடத்தலாம் என்றனர்.

இதனால் விரக்தி அடைந்தவர் ஆக.9 இரவு 10:30 மணிக்கு தனது தந்தையின் மருந்துக் கடையில் இருந்து ஒரு அட்டை தூக்க மாத்திரைகளை எடுத்துச் சென்றார். பின்னர் அவர்களின் மருத்துவ மனையில் வைத்து அதனை உட்கொண்டார்.இதனால் மயக்கமுற்றவரை அவர்களது மருத்துவமனையில் முதலுதவி அளித்து விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.தீவிர சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனை சென்றவர் நேற்று முன்தினம் அதிகாலை 4:45 மணிக்கு இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X