ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்: இஸ்ரோ தலைவர் | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்: இஸ்ரோ தலைவர்
Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News

திருநெல்வேலி : ''குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்,'' என, இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார்.



இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலி மாவட்டம், மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்தார். நேற்று துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம் சென்றார். கடற்கரையை ஒட்டி ராக்கெட் ஏவுதளம் அமைக்க, 2,233 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.





நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு இஸ்ரோ சார்பில் கட்டுமான பணிகளை துவக்குவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார்.ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ அதிகாரிகள், துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:

இந்தியாவின் தெற்கு எல்லையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மிகச் சரியான இடம் கிடைத்துள்ளது. ஆய்வும் திருப்திகரமாக அமைந்தது. மத்திய அரசு அனுமதி, பாதுகாப்பு துறை அனுமதிக்காக காத்திருக்கிறோம். இந்த பகுதியில் இருந்து பெரிய ராக்கெட்டுகள் ஏவ முடியாது. எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய வகை ராக்கெட்டுகள் ஏவப்படும். விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X