அசைவ ஓட்டலாக மாறிய தியாகி வைத்தியநாதய்யர் வீடு | மதுரை செய்திகள் | Dinamalar
அசைவ ஓட்டலாக மாறிய தியாகி வைத்தியநாதய்யர் வீடு
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 

மதுரை : மதுரை கீழக்குயில்குடி அன்னை தெரசா பெண்கள் பல்கலை மையத்தில் சுதந்திர வேள்வியில் வீர மகளிர்' குறித்த நிகழ்ச்சி நடந்தது.காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராசன் பேசியதாவது:



சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. தியாகிகளை போற்றி அவர்களது நினைவு சின்னங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆலய பிரவேசம் புரட்சி செய்த தியாகி வைத்தியநாதய்யர் வாழ்ந்த இல்லம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ளது.

அது இன்று அசைவ ஓட்டலாக மாறியுள்ளது என்றார்.மைய இயக்குனர் புஷ்பராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பெண் தியாகிகளின் புகைப்பட கண்காட்சியும், சுதந்திர தின வண்ண கோலங்களும் காண்போரை கவர்ந்தன. துணை பேராசிரியர் வள்ளி தேவசேனா நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X