கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது: ஹெச்.ராஜா | சிவகங்கை செய்திகள் | Dinamalar
கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது: ஹெச்.ராஜா
Added : ஆக 12, 2022 | கருத்துகள் (79) | |
Advertisement
 
Latest district News

காரைக்குடி : ''காவல்துறை கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது; கவர்னரை ரஜினி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை,'' என, காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.



சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் கூறியதாவது: கனல் கண்ணன், ஈ.வெ.ரா., சிலை அகற்றம் குறித்து பேசியதில் தவறில்லை. இதற்கு முன் சோ.ராமசாமி கூட பேசியுள்ளார். காவல்துறை ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்படக் கூடாது.கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தகராறு செய்தவர்களை தான் கைது செய்தது. யாரையும் ஜாதி பார்த்து கைது செய்யவில்லை. கவர்னரை, ரஜினி சந்தித்தது தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம்.





ரஜினி அரசியல் சம்பந்தமாக உரையாடினோம் என்பதிலும் தவறில்லை. அரசு, அரசியல் எல்லாம் ஒன்று தான். மதுரையில் அதிகமாக புழங்கிய போலி பாஸ்போர்ட் குறித்து கூட ரஜினி பேசி இருக்கலாம்.பாடப்புத்தகத்தில் இருந்த பல நல்ல விஷயங்களை கல்வித்துறையினர் அகற்றி விட்டனர். இதனால், மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் சென்றடையவில்லை.அரசு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக, முதலில் மதுக் கடைகளைத் தான் மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X