குபேர சாய்பாபா கோவில் மங்கலம் பூஜை பூர்த்தி விழா | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
குபேர சாய்பாபா கோவில் மங்கலம் பூஜை பூர்த்தி விழா
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 
Latest district News



திருக்கோவிலுார்,-திருக்கோவிலுாரில், புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேக மங்கல பூஜை பூர்த்தி விழா நடந்தது.திருக்கோவிலுார் தியாகி வடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்ததைத் தொடர்ந்து தினமும், மங்கல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாள் மங்கள பூஜையின் பூர்த்தி விழா நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கி கலச ஸ்தாபனம், ஹோமங்கள் நடந்தது.பின், 11:00 மணிக்கு அபிஷேகம், 12:30 மணிக்கு மகாபூர்ணகுதி, மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு பஜன், 7:30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. கோவில் நிர்வாகி சுப்பு உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X