ஆர்.டி., விவாஹா ஜூவல்லரி திறப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஆர்.டி., விவாஹா ஜூவல்லரி திறப்பு
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 


ஈரோடு ஆர்.டி.குழுமத்தின், 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, ஈரோடு-நேதாஜி சாலையில், ஆர்.டி.விவாஹா ஜூவல்லர்ஸ் விரிவுப்படுத்தப்பட்ட நகை கடை துவக்க விழா நேற்று நடந்தது. ஆர்.டி.குழும நிறுவன தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ராதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் ராகுல் செந்தில்குமார், கீர்த்தனா செந்தில்குமார் குத்து விளக்கேற்றினர். அர்ட்ரா கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் சிவசாமி, சுமதி சிவசாமி, தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆர்.டி.குழும நிறுவன தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

ஆர்.டி. விவாஹா ஜூவல்லர்ஸ், 5,௦௦௦ சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய நகைக்கூடம், ரோஸ் கோல்டு, வைரம் என சிறப்பு நகைகளுக்கு என்று தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. லிப்ட் வசதி, கார் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தியுள்ளோம். திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக வரும், 15ம் தேதி வரை, தங்க நகை வாங்கும் அனைவருக்கும், எடைக்கு எடை வெள்ளி இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X