படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை விழிப்புணர்வு நிகழ்வில் அமைச்சர் உறுதி | ஈரோடு செய்திகள் | Dinamalar
படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை விழிப்புணர்வு நிகழ்வில் அமைச்சர் உறுதி
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 


போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஈரோடு ரயில்வே காலனி, நகரவை மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி வரும், 19 வரை நடத்தப்படுகிறது. தவிர தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டோர், மனம் திருந்தி வந்தால், அவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் மறுவாழ்வு ஏற்படுத்தி தரப்படும்.
மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை. திடீரென மூடினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் அருகே மதுக்கடை இருந்தால், அவற்றை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஈரோட்டுக்கு வரும், 25, 26ல் முதல்வர் வருகிறார். 60 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு அதிகாரப்பூர்வமாக நாளை (இன்று) காலை, 8:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விழாவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X