எதையும் எழுத மொழி அவசியமானது : முன்னாள் துணை வேந்தர் தகவல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
எதையும் எழுத மொழி அவசியமானது : முன்னாள் துணை வேந்தர் தகவல்
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 


ஈரோட்டில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவில், சென்னை பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமி எழுதிய, 'ப.க.பொன்னுசாமியின் படைப்புலகம்' நுால் வெளியீட்டு விழா நடந்தது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பொது மேலாளர் ரத்தினசபாபதி வரவேற்றார். நுாலை வெளியிட்டு பேராசிரியர் செல்லப்பன் வெளியிட்டார். பெரியார் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேல், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் நுாலை பெற்று கொண்டனர்.

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசுகையில், ''தமிழ் நுால்களில் தமிழ் - ஆங்கிலம் கலந்து வருவது மிகக்குறைவு. ஆங்கிலம் - தமிழ் கலந்து வரும் நுால்களும் மக்களை சென்றடையும். பழந்தமிழ், படைப்பிலக்கிய நுால்களை படிப்பதன் மூலம், பல புதிய சொற்கள், சிறந்த சொல்லாட்சி அமையும். மொழிப்புலமை கிடைக்கும். அதனால் சிறந்த நுாலை வழங்க இயலும்,'' என்றார்.
நுாலாசிரியர், முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமி பேசியதாவது:
நான் அறிவியல் கற்றாலும், தமிழில் அதிகம் எழுதி வருகிறேன். என் பிழைப்புக்கு அறிவியல் என்றாலும், வாழ்க்கைக்கு தமிழ் என அமைந்துள்ளது. அதிலும் அறிவியல் தமிழை எழுதி வருகிறேன்.
கடந்த, 30 ஆண்டாக, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கு அடுத்ததாக, நான்காம் தமிழாக அறிவியல் தமிழை வலியுறுத்துகிறேன். புதிய கல்வி கொள்கையில் கூட அறிவியல் - கணக்குடன் தமிழ் வருமா என்பது தெரியவில்லை. இதில், என் முயற்சி தோற்றுப்போனதாக கருதுகிறேன். அறிவியல் பார்வையுடன் இலக்கிய படைப்புகளை தமிழ் வாயிலாக தொடர்ந்து கொண்டு வருகிறேன்.
கடந்த காலம், எதிர்காலத்தை எழுதுவதை தவிர்த்து, நிகழ்காலம் மற்றும் அதற்கான இலக்கியத்தை எழுதுவதால், வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் நாம் அறிய வேண்டியது, எதையும் எழுத மொழி அவசியமானது.
இவ்வாறு பேசினார்.
சுப்ரபாரதிமணியன் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X