மின் ஊழியர் 'சஸ்பெண்ட்' | திருப்பத்துார் செய்திகள் | Dinamalar
மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 

நாட்றம்பள்ளி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35. இவர், நாட்றம்பள்ளி அருகே கேத்தாண்டப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சார அளவை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார்.

காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 50 பேர் கடந்த மாதம் மின் கட்டணத்தை இவரிடம் செலுத்தி உள்ளனர். ஆனால், மின் கட்டணம் செலுத்தவில்லை என, அவர்களது மின் இணைப்பு துண்டிக்க பட்டது.ஷ

புகார்படி, மின் வாரிய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், 50 பேர் செலுத்திய, 46 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை கம்யூட்டரில் பதிவேற்றம் செய்யாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.இதையடுத்து, வெங்கடேசனை, 'சஸ்பெண்ட்' செய்து, வாணியம்பாடி மின் வாரிய செயற்பொறியாளர் பாஷா முகமது நேற்று உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X