திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் வழியே தேசிய கொடியுடன் பேரணி செல்ல முயன்ற ஹிந்து முன்னணியினருக்கு போலீசார் அனுமதி மறுத்து 27 பேரை கைது செய்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி ஹிந்து முன்னணியினர் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி கேட்டிருந்தனர். திருநெல்வேலி வ.உ .சி. மைதானத்தில் இருந்து மேலப்பாளையம் வழியே டவுன் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். மீறி செல்ல முயன்ற ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.