குப்பை சேகரிக்க 3 பேட்டரி வண்டி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
குப்பை சேகரிக்க 3 பேட்டரி வண்டி
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 


பெ.நா.பாளையம் : பன்னிமடை ஊராட்சியில் குப்பையை சேகரிக்க, தனியார் நிறுவனங்கள் சார்பில் மூன்று பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டன.துடியலுார் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தினசரி சுமார் ஐந்து டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன.

குப்பையை சேகரிக்க வசதியாக கே.என்.ஜி., புதுாரை சேர்ந்த ரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் ஒரு பேட்டரி வண்டியும், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆர்.கே. எக்கிரான் நிறுவனம் சார்பில் இரண்டு பேட்டரி வண்டிகளும் பன்னிமடை ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பன்னிமடை ஊராட்சி தலைவர் ரத்தினம், துணைத் தலைவர் அருள்குமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X