பெங்களூரு - மாலத்தீவு விமானம்கோவையில் அவசர தரையிறக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பெங்களூரு - மாலத்தீவு விமானம்கோவையில் அவசர தரையிறக்கம்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 

கோவை:பெங்களூருவில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற விமானம், எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கோவையில் அவசரமாக தரை இறங்கியது.


பெங்களூருவில் இருந்து நேற்று காலை 11:45 மணிக்கு, 'கோபர்ஸ்ட்' நிறுவனத்தின்ஏர்பஸ் 320 ரக விமானம், 92 பயணிகளுடன் மாலத்தீவு நோக்கி புறப்பட்டது. விமானம் கேரளா மீது பறந்து கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி அலாரம் ஒலிக்கத் தொடங்கியது.விமான இன்ஜின்களில் அதிகப்படியான வெப்பம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் அலாரம் ஒலித்தது. உஷாரான விமானி, விமானத்தை கோவை விமான நிலையத்தில் தரை இறக்கினார்.
பொறியாளர்கள், விமான இன்ஜின்களை ஆய்வு செய்தனர். இதில் அலாரத்தில் கோளாறு இருப்பதும், இன்ஜின்கள் இரண்டும் நன்றாக செயல்படுவதும் கண்டறியப்பட்டது.எனினும் அந்த விமானம் மாலத்தீவு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து விமான நிறுவனம் மும்பையில் இருந்து மாற்று விமானத்தை அனுப்பி வைக்க முடிவு செய்தது.

இந்த பிரச்னையால் நீண்ட நேரம் விமானத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் பயணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.தங்களுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்றும், தாமதமாக சென்றால் பல லட்சம் ரூபாய் வீணாகும் என்றும் பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து பயணிகள் கோவை விமான நிலையத்தில் இறங்க அனுமதி வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு மாற்று விமானம் வந்து சேர்ந்தது. வழக்கமான 'இமிக்ரேஷன்' சோதனைகளுக்கு பிறகு, பயணிகள் மாற்று விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X