சுதந்திர தினவிழா பட கண்காட்சி | மதுரை செய்திகள் | Dinamalar
சுதந்திர தினவிழா பட கண்காட்சி
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 

மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் 75வது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 'சுதந்திரத்திற்கு முன்பு நாட்டு பிரிவினையின் போது ஏற்பட்ட துயரங்கள்' குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கியது.



பேரையூர் அருகே டி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தியாகி அழகம் பெருமாள் 98, துவக்கி வைத்தார். ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்து பேசுகையில் 'தியாகி அழகம்பெருமாள், 1942ல் இதே ரயில் நிலையம் எதிரே 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று கைதானார். 80 ஆண்டுகளுக்கு பின் இதே ரயில் நிலையத்தில் சுதந்திர தினவிழாவில் தியாகியாக பங்கேற்பது நமக்கு பெருமை' என்றார்.

கோட்ட ஊழியர் நலஅதிகாரி சங்கரன், உதவிக்கோட்ட நலஅதிகாரி ராமகிருஷ்ணன் பேசினர். ரயில்வே ஊழியர்களுக்கு சுதந்திர தினவிழா வினாடி வினா போட்டி நடந்தது. ரயில்வே அதிகாரி சீனிவாசன் நடத்தினார். வர்த்தக பிரிவு ஊழியர்கள் கிருஷ்ணன், முருகப்பொற்பாண்டியன், நிதிப்பிரிவு அலுவலர் அமுதா ஆகியோர் அணி முதல் பரிசு வென்றது. வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை வலியுறுத்தி ரயில்வே நிலையத்தில் 'செல்பி பாயின்ட்' ஏற்படுத்தப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X