6 தபால் அலுவலகங்களில் 'பார்சல் பேக்கிங்' வசதி | மதுரை செய்திகள் | Dinamalar
6 தபால் அலுவலகங்களில் 'பார்சல் பேக்கிங்' வசதி
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 

மதுரை : மதுரையில் 6 தபால் அலுவலகங்களில் அயல், உள்நாட்டு பார்சல் பேக்கிங் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



மதுரை தலைமை அஞ்சலகத்தில் மட்டும் 'பார்சல் பேக்கிங்' செய்யும் வசதி இருந்தது. இவ்வசதி தற்போது தல்லாகுளம், அரசரடி தலைமை அஞ்சலகங்கள், மேலுார், திருமங்கலம், காந்திநகர், முனிச்சாலை தபால் நிலையங்களில் துவங்கப்பட்டுள்ளது.

கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் கூறுகையில், "குறிப்பாக அயல்நாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் பொருட்களுடன் வந்தால் போதும் அலுவலகத்தில் 'பேக்கிங்' செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். உள்நாட்டு சேவைக்கும் பரிசீலிக்கப்படும். இவ்வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X