ஒரே நாளில் 50,000 தேசியக்கொடிகளை விற்று பணம் கட்ட அழுத்தம்! | மதுரை செய்திகள் | Dinamalar
ஒரே நாளில் 50,000 தேசியக்கொடிகளை விற்று பணம் கட்ட அழுத்தம்!
Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
Latest district News

மதுரை: மதுரை மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் ஒரே நாளில் 50 ஆயிரம் தேசியக்கொடிகளை விற்று பணம் கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ரூ.20க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது. முன்பே திட்டமிடாமல் அவசரகதியில் 2.5 லட்சம் கொடிகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு மண்டலத்திற்கு 50 ஆயிரம் வீதம் 5 மண்டலங்களுக்கு 2.5 லட்சம் கொடிகள் பிரித்து அனுப்பப்பட்டன.

மாநகராட்சி மைய, மண்டல, வரி வசூல் மையங்கள் தவிர வீடுதோறும் கொடி விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் கொடி விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கமான மாநகராட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.



சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் விரைந்து கொடிகளை விற்று தீர்க்க வேண்டும் என்றும், விற்க முடியவில்லை என்றால் 50 ஆயிரம் கொடிகளை விற்று பணத்தை இன்றைக்குள் (ஆக.,13) கட்ட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்பதால் மனஅழுத்தத்தில் தவிக்கிறார்கள்.


அவர்கள் கூறுகையில், ''ஏற்கனவே பல பணிகளை ஒருவரே இழுத்து போட்டு செய்கிறோம். மண்டலங்களில் பணியாளர் பற்றாக்குறையும் உள்ளது. இந்நிலையில் இது போன்ற அழுத்தம் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்'' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X