போலீஸ் செய்திகள்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

3 பவுன் நகை பறிப்பு

மதுரை: அப்பன்திருப்பதி அருகேயுள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி 40. இவர் மருந்து கடையில் இருந்தபோது டூவீலரில் வந்த நபர், 3 பவுன் நகையை பறித்துச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

திருட்டு பெண்கள் கைது



மதுரை: விருதுநகர் செட்டிப்பட்டி மாரியம்மாள் 32. தெற்குவாசல் பஸ் ஸ்டாப்பில் இவரது பையில் இருந்து பணத்தை திருடிய வெளிச்சநத்தம் ஜோதிமணி 40, ஜெயந்தி 47, ஆகியோரை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர். அதேபோல் பைகாரா மேனகா 35, அரசு பஸ்சில் வந்தபோது 6 கிராம் தங்க டாலர், ரூ.4500 இருந்த பர்ைஸ திருடிய தேனி ஜம்புலிபுதுார் பிரியா 24, கைது செய்யப்பட்டார்.

போலீஸ் வாகனம் மோதி பலி

மதுரை: மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத்தின் அதிரடிப்படை வாகனம் ஆக.,10 இரவு அண்ணாநகர் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராவிதமாக டூவீலரில் வந்த சாமநத்தம் ஆரோக்கியராஜ் 26, மீது மோதியது. சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். டைல்ஸ் தொழிலாளியான இவருக்கு 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

டூவீலர் மோதி பலி

மேலுார்: வெள்ளலுார் முத்துக்குமரன் 35. வெளிநாடு சென்று திரும்பியவர். நேற்று மதியம் உறவினரின் டூவீலரில் மேலுாரில் இருந்து அழகர்கோவிலுக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. ஆயத்தம்பட்டி அருகே எதிரே வந்த டூவீலர் மோதி இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் கவிழ்ந்து வாலிபர் பலி

வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை சடையாண்டி. இவர் ஆக.,11 இரவு காரில் குடும்பத்தினருடன் மதுரை சென்று திரும்பினார். வாடிப்பட்டி நான்குவழிச் சாலை விராலிப்பட்டி பாலம் அருகே கார் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டிய சடையாண்டி, தந்தை தாசகவுண்டர்80, காயமடைந்தனர். இவர்களது உறவினர் சின்னப்பர் 22, இறந்தார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

200 கிலோ புகையிலை பறிமுதல்

மேலுார்: கோடநத்தாம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது டூ வீலரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை கொண்டு சென்ற சிவசீமானை 40, இன்ஸ்பெக்டர் சார்லஸ், எஸ்.ஐ. முத்துக்குமார், தனிப்பிரிவு போலீசார் ரமேஷ் கைது செய்து 200 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர். புகையிலையை விற்ற மதகுபட்டி கணேசனை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X