முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு | மதுரை செய்திகள் | Dinamalar
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
Latest district News

மதுரை : நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மதுரை ரயில்வேயில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பாராட்டு விழா ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமையில் நடந்தது.



அவர் பேசுகையில், "ரயில்வே கேட்டுகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் முன்னாள் ராணுவ வீரர்களின் பணி சிறப்பாக உள்ளது. ராணுவ வீரர்கள் கடைபிடிக்கும் ஒழுக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு ரயில்வே பணிக்கு வந்தேன். ரயில்வேயில் உள்ள பிராந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது கர்னலாக பதவி வகிப்பது பெருமையாக உள்ளது" என்றார்.

ரயில் மேலாளர், ஆவண காப்பாளர், 16 பாயின்ட்ஸ் மேன் ஆகியோர் ராணுவ சீருடையில் அணிவகுப்பு நடத்தினர். அவர்களுக்கு கோட்ட மேலாளர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், மேலாளர் சபரீஸ் குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X