நொய்யல் ஆற்றில் மூதாட்டி விழுந்தாரா? தேடுகின்றனர் தீயணைப்பு வீரர்கள்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


ஆலாந்துறை, : ஆலாந்துறையில், காணாமல் போன மூதாட்டியை தேடும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.ஆலாந்துறை அடுத்த சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சின்னகமலம்,60. இவர் சீனிவாசபுரத்தில் தனது மகள் வீட்டில் வசிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். வலி தாங்க முடியாமல், இதுவரை மூன்று முறை தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம், வீட்டை விட்டு வெளியே சென்ற சின்னகமலம், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல இடங்களிலும் தேடி உள்ளனர். அப்போது, வீட்டின் அருகே உள்ள, தண்ணீர் தொட்டி அருகில், சின்னகமலம் அணிந்திருந்த காலணி மற்றும் துண்டு கிடந்துள்ளது. அப்பகுதியில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், நொய்யல் ஆறு உள்ளது. தற்போது நொய்யல் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சின்னகமலம் நொய்யல் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, சின்னக்கமலத்தின் மகன் விஸ்வநாதன் ஆலந்துறை போலீசில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நேற்று காலை முதல், தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள், நொய்யல் ஆற்றில் மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும், மூதாட்டி கிடைக்கவில்லை. நாளையும், தேடுதல் பணி தொடரும் என, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X