'தினமலர்' சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திருப்பூர் : திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில், நாளை, சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் நடக்கிறது. இதில் அலைகடலென பங்கேற்க பொதுமக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.நாடு முழுவதும், 75வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாட்டுப்பற்றையும், தேச பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில், திருப்பூரில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், நாளை(14ம் தேதி), சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், காலை, 6:45 மணிக்கு, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட தலைவர் சிவராம், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், 'சைமா' தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர், 75 மரக்கன்றுகள் நட்டு வைக்கின்றனர்.அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி., செஷாங் சாய் எம்.எல்.ஏ.,கள் செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், விஜயகுமார், ஆனந்தன் உள்ளிட்டோர் மெல்லோட்ட நிகழ்ச்சியை துவக்கி வைக்கின்றனர்.

நாட்டுப்பற்று, தேச ஒற்றுமை, சுதந்திர போராட்ட வரலாறுகளை விளக்கும் வகையிலான, அலங்கார ஊர்திகள்; ஊர்க்காவல் படையினரின், பேண்டு வாத்திய இசை; தேசியக்கொடியை ஏந்திய வீரர்களுடன், மிடுக்குடன் அணிவகுத்து செல்லும் ஐந்து குதிரைகள்; 'மராத்தான்' வீரர்கள், 300 பேரின் மித ஓட்டத்துடன், மெல்லோட்டம் துவங்குகிறது.

பேண்டு வாத்திய குழுவுடன் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்; தொழில்துறையினர், பொதுநல மற்றும் தன்னார்வ அமைப்பினர் தேசியக்கொடியை ஏந்தியபடி, பேனர் சகிதமாக பங்கேற்கின்றனர். தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணம், பரதநாட்டியம், பவளகும்மி மற்றும் ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்ட வீரர்களும், மெல்லோட்டத்துக்கு பெருமை சேர்க்கின்றனர். பொதுமக்கள், குடும்பத்தினருடன் திரள உள்ளனர்.




கலை நிகழ்ச்சி மேடைகள்



மெல்லோட்டத்தில் பங்கேற்போரை உற்சாகமூட்டும் வகையில், நான்கு இடங்களில், சிறிய மேடை கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.டி.கே.டி., பஸ் ஸ்டாப் அருகே அமையும் மேடையில், முருகன் பவள கும்மியாட்ட குழுவினர் கும்மியாட்டம்; காட்டன் மார்க்கெட் போஸ்ட் ஆபீஸ் எதிரே அமையும் மேடையில், சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம்; மேம்பாலம் இறங்கும் இடத்தில், சிக்கண்ண செட்டியார் வீதி சந்திப்பில் அமையும் மேடையில் கொங்கு பெருஞ்சலங்கை குழுவினரின், பெருஞ்சலங்கையாட்டம்; மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியரின், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.



பாரதி பாஸ்கரின் சொற்பொழிவு



திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கும், மெல்லோட்டம், பல்லடம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம், காமராஜர் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மாநகராட்சி அலுவலகம், முனிசிபல் ரோடு, வளர்மதி பாலம், பார்க் ரோடு வழியாக நஞ்சப்பா பள்ளியை சென்றடைகிறது.பள்ளி மைதானத்தில், 7:45 மணி முதல், 8:40 மணி வரை, கோவை 'புட்லுாஸ்' குழுவினரின் கலை நிகழ்ச்சி-2ம் பக்கம் பார்க்க

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X