தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த பரவலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு வந்த ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார், விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர்.விவசாயி சக்திவேல் என்பவர் ஏ.எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.

அதில், எங்கள் ஊரில் உள்ள இருளர் இன மக்களுக்கு தனி மயானம் உள்ளது.கடந்த 2000ம் ஆண்டு, இருளர் இன மக்கள் வாழும் பகுதியிலிருந்து, மயானத்திற்கு செல்ல, எனது நிலம் மற்றும் ஊர் விவசாயிகளின் நிலங்களின் குறுக்கே புதிய பாதை அமைக்க, கடலுார் மாவட்ட நிர்வாகம், நில எடுப்பு அறிவிப்பு ஆணை எண் 53ல், அரசிதழில் வெளியிட்டது.இதனை எதிர்த்து கடந்த 2005ம் ஆண்டு எனது சகோதரர் சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன்பேரில், ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தாரால் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10.08.2022ம் தேதி இருளர் குடியிருப்பில் வசித்த ஜெயபாரதி மனைவி ரம்யாவின் சடலத்தை அடக்கம் செய்ய, வழக்கமான பாதையை பயன்படுத்தாமல், எங்களது நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களின் இடையே சடலத்தை அத்துமீறி எடுத்துச் சென்றனர்.இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின், நீதிமன்ற உத்தரவு என்றால், சப் கலெக்டரிடம் மனு அளியுங்கள் என கூறினார். அதன்பேரில், அனைவரும் சப் கலெக்டர் பழனியிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X