நாடு 2047ல் வல்லரசாக மாறும்:மத்திய இணை அமைச்சர் முருகன் உறுதி
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை:''அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல, 2047ம் ஆண்டு இந்தியா வல்லரசாக மாறும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.


நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில், நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறியவில் கல்லுாரியில் சுதந்திர ஓட்டம் நேற்று நடந்தது.முருகன் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றன.
பிரதமர் மோடி, 13- முதல், 15ம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதுகுறித்து, 10 நாட்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.பிரதமரின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வருகின்றனர்.

பூலித்தேவன், தீரன் சின்னமலை, பாரதியார் போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மாநிலம் தமிழகம்.குறிப்பாக, வ.உ.சி.,யின், 150-வது ஆண்டு பிறந்த தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களும் பலர் உள்ளனர். சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடான இந்தியா, 2047ம் ஆண்டில் அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல வல்லரசாக மாறும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால், 1930ம் ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, கண்ணனுார் சிறையில் அடைக்கப்பட்டவர் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி கோபாலசாமி செட்டியார்.கோவை, துடியலுார் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு இணை அமைச்சர் முருகன் சென்றார். அங்கு அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின்னர் அவரது மகன் ரங்கராஜுக்கு தேசியக் கொடி வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X