கடத்தச்சொன்னவர் 'போட்டுக்கொடுத்தார்' குருவியிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
கடத்தச்சொன்னவர் 'போட்டுக்கொடுத்தார்' குருவியிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 

திருநெல்வேலி:அபுதாபியில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொள்ள திட்டமிட்ட அலாவுதீன் 39 போலீசாரிடம் சிக்கினார். ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல்நகரை சேர்ந்தவர் அலாவுதீன் 39. இவர் நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். தமது நண்பர்கள் மூவருடன் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடியில் போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர். சந்தேகத்தின்பேரில் அவரிடம் தனியே விசாரித்த போது அவர் தங்கம் கடத்தியதை ஒப்புக்கொண்டார். அவரது ஆசனவாயில் 4 முட்டை கூடுகளில் தலா 250 கிராம் தங்கம் வீதம் ஒரு கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது பிடிபட்டது.

அவருடன் வந்திருந்த பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பு பிரவீன் சார்லஸ் அணைக்காடு செந்தில்குமார் 36 பொன்னவராயன் கோட்டை வீரபுத்திரன் 40 ஆகியோரை போலீசார் விசாரித்தனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் ஒரு கும்பல் அலாவுதீனை குருவியாக பயன்படுத்தி தங்கம் கடத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் வந்து இறங்கியதும் அலாவுதீன் அந்த நபருக்கு போன் செய்துள்ளார். அவர் பதிலளிக்காததால் அலாவுதீன் பட்டுக்கோட்டைக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது. அலாவுதீனோ தங்கம் கடத்த சொன்னவரை ஏமாற்றிவிட்டு திருவனந்தபுரத்தில் தங்கத்தை ஒப்படைக்காமல் தாமே கொண்டு செல்ல முயற்சித்ததால் கடத்தல் கும்பலே போலீசுக்கு தகவல் கூறி அலாவுதீனை சிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
கடத்தல் வழக்கு என்பதால் நான்கு பேர் மற்றும் ஒரு கிலோ தங்கம் கார் ஆகியவற்றை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் நாங்குநேரி போலீசார் ஒப்படைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X