சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் இன்று! அலைகடலென திரளும் தேசப்பற்றாளர்கள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் இன்று! அலைகடலென திரளும் தேசப்பற்றாளர்கள்
Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்:'தினமலர்' நாளிதழ் சார்பில் சுதந்திர தின பவளவிழா மெல்லோட்டம் இன்று நடைபெற உள்ளதால் திருப்பூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.நாட்டின், 75வது சுதந்திர தின பவள விழாவை, மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், திருப்பூரில் மெல்லோட்டம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. தேசப்பற்றை பறைசாற்றும் வகையில், பொதுமக்கள், இதில் உற்சாகத்துடன் பங்கேற்க தயாராகியுள்ளனர்.


கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று காலை, 7:00 மணிக்கு, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத், போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி., செஷாங் சாய், மேயர் தினேஷ்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மெல்லோட்டத்தை துவக்கி வைக்கின்றனர்.முன்னதாக, 75 வகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவின் அலங்கார ஊர்தி; ஊர்க்காவல் படையினரின் மிடுக்கான பேண்ட் வாத்திய அணிவகுப்பு; தேசியக்கொடி ஏந்திய குதிரை வீரர்கள் அணிவகுப்பு; பள்ளி மாணவர்களின் 'ஸ்கேட்டிங்'; மராத்தான் வீரர்களின் மித ஓட்டம்; அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அணிவகுப்பு; தொழில் அமைப்பினரின் அணிவகுப்பு; பொதுநல அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், லயன்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்பினரின் சீரான அணிவகுப்புடன், பல்வேறு தரப்பினரும் மெல்லோட்டத்தில் பங்கேற்கின்றனர்.நான்கு இடங்களில், பவளக்கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், பரத நாட்டியம் போன்ற, மேடை கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெல்லோட்டம், பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம், வளர்மதி பாலம், பார்க்ரோடு வழியாக, நஞ்சப்பா பள்ளியை சென்றடைகிறது.பள்ளி வளாகத்தில், மெல்லோட்டத்தை வரவேற்கும் வகையில், 'புட்லுாஸ்' குழுவினரின் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகளும், தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கரின் சுதந்திர தின எழுச்சி சொற்பொழிவும் நடக்கிறது.
வானுயர பறக்கும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலுான்கள் வானில் பறக்கவிடப்படும். சுதந்திர தின பவளவிழா உறுதிமொழி ஏற்பு, தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெறுகிறது.தேசப்பற்றை நெஞ்சில் சுமந்தபடி, தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, வீரர், வீராங்கனைகளும், எதிர்கால சந்ததியினரும் மெல்லோட்டத்தில் அணிவகுக்க தயாராகிவிட்டனர். 'தினமலர்' நாளிதழின் இன்றைய மெல்லோட்ட நிகழ்ச்சி, வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமையுமென, ஒட்டுமொத்த திருப்பூரும் ஆவலுடன் காத்திருக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X