இளநிலை படிப்புகளுக்குகால அவகாசம் நீட்டிப்பு
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., 'அக்ரி' படிப்பின்கீழ், 12 பாடபிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், 2,148, இணைப்புக் கல்லுாரிகளில், 2,337 என, 4,485 இடங்கள் உள்ளன. வரும், 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை கடந்த, ஜூன், 28ம் தேதி துவங்கியது.மாணவர்கள், http://tnau. ucanapply. com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரே விண்ணப்பத்தில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். கடந்த, ஜூலை, 27ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆக., 10ம் தேதி வரை முதற்கட்டமாக காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.'நீட்' தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதையடுத்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை இரண்டாம் முறையாக வரும், 20ம் தேதி வரை பல்கலை நிர்வாகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X