முதியோரை குறிவைத்து வீட்டில் திருட்டு:காதல் ஜோடியிடம் விசாரணை தீவிரம்
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

தொண்டாமுத்துார்:கோவையில் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து முதியவரை கட்டிப்போட்டு திருடிய காதல் ஜோடியிடம் பல மாவட்ட போலீசாரும் விசாரணை நடந்த திட்டமிட்டுள்ளனர்.கோவை, வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தில், வீட்டில் தனியாக இருந்த பெரியராயப்பன், 76, என்பவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டு சென்ற இளைஞர், இளம்பெண், அவரை கட்டிப்போட்டு பீரோவை உடைத்து நகையை திருட முயன்றனர். லாக்கரை உடைக்க முடியாததால், பீரோவில் இருந்த பணத்தை எடுத்து தப்பி செல்லும் போது அப்பகுதி மக்களின் உதவியுடன் பிடிபட்டனர்.இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பெரியராயப்பன் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், இளம்பெண் திருச்சியை சேர்ந்த செண்பகவல்லி, 24 என்பதும், இவர் குடும்பத்துடன் கோவை இருகூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இளைஞர், விருதுநகரை சேர்ந்த தினேஷ்குமார், 23 என்பதும், இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது.இவர்கள் இரு வாரங்களுக்கு முன், பி.என்.புதுார், முல்லை நகரில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை கட்டிப்போட்டு, 28 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். போலீசாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'இருவரும், முதியவர்கள் உள்ள வீட்டை நோட்டமிட்டு, அவர்கள் தனியாக இருக்கும் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து, கட்டிப்போட்டு திருடி வந்துள்ளனர். முல்லை நகரில் திருடிய பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதுபோன்று திருடும் சம்பவம், சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங் களிலும் நடந்துள்ளது. இதனால், அந்த திருட்டு களிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, கோவை, திருப்பூர், ஈரோடு, ஸ்ரீவில்லிபுத்துார் என பல மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் விசாரணை நடத்த உள்ளனர். தொடர் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X