கோவைக்கு அமைச்சர்கள் வருகை:கழிப்பறை பயன்படுத்த தடை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவைக்கு அமைச்சர்கள் வருகை:கழிப்பறை பயன்படுத்த தடை
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

கோவை:கோவையில் கழிப்பறை தரத்தை மதிப்பீடு செய்யும் 'க்யூ ஆர்' ஸ்கேன் திட்டத்தை துவக்கி வைக்க மூன்று அமைச்சர்கள் நேற்று வந்த நிலையில், பொதுமக்கள் கழிப்பறை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.கோவை மாநகராட்சி வசம் உள்ள, 370 கழிப்பறைகளின் பராமரிப்பை மேம்படுத்த, 'க்யூ ஆர்' ஸ்கேன் மூலம் மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை பயன்படுத்துவோர் 'ஸ்மார்ட்' மொபைல் போனில் 'க்யூ ஆர் கோடு' ஸ்கேன் செய்தால் கழிப்பறை எப்படி இருக்கிறது என கருத்து சொல்லலாம்; புகைப்படம் எடுத்தும் பதிவேற்றம் செய்யலாம்.காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே 'துாய்மை பாரதம்' திட்டத்தில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ள கழிப்பறையில் இப்புதிய நடைமுறையை, தமிழக அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி, ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்காக, நேற்று காலை முதல் மாலை வரை கழிப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்தது. முகம் பார்க்கும் கண்ணாடி பழையதாக இருந்ததால், காவி நிற வேஷ்டியால் மறைத்து வைத்திருந்தனர். ஆங்காங்கே சீரமைப்பு பணி மட்டும் செய்யப்பட்டு இருந்தது.அமைச்சர்கள் வருகை காரணமாக, கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; அமைச்சர்கள் வந்து சென்ற பிறகும் கழிப்பறை மூடப்பட்டது. அதனால், பெண் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.முன்னதாக, 75வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை மாநகராட்சியில், 75 'ரிசர்வ் சைட்'டுகளில் 'மியாவாக்கி' முறையில், 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, அடர் வனம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை, பீளமேடு ஹட்கோ காலனியில், அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இப்பணி மற்ற பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ள, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



'வன்முறையால் அழிவார்கள்'

மதுரையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக, அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, 'அதை விடுங்கப்பா... கோவையை பத்தி கேளுங்க' என, நழுவினார். 'நீங்கள் சீனியர் மினிஸ்டர். வன்முறை கையாளப்பட்டு இருப்பதால், உங்கள் கருத்தை கேட்கிறோம்' என, மீண்டும் கேட்டதும், 'வன்முறையை கையில் எடுத்தவர்கள், வன்முறையாலேயே அழிவார்கள்' என்றார். 'மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறதா' என கேட்டதற்கு, 'ஏதாவது நிபந்தனை விதித்து நிதி வழங்குகிறது' என, அமைச்சர் நேரு கூறினார்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X