2 லட்சம் தேசிய கொடி :நீலகிரி மக்கள் ஆர்வம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
2 லட்சம் தேசிய கொடி :நீலகிரி மக்கள் ஆர்வம்
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டி:நீலகிரியில், 2 லட்சம் தேசிய கொடி வீடு, தனியார் நிறுவனங்களில் ஏற்றப்பட்டது.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை 'சுதந்திர அமுத பெருவிழா'வாக கொண்டாட நீலகிரி மாவட்டம் தயாராகி வருகிறது. நேற்று முதல் நாளை வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மக்களும் ஆர்வமுடன் கொடி ஏற்றி வருகின்றனர். நீலகிரியில், நான்கு நகராட்சி, 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர். பா.ஜ., சார்பிலும் வீடுதோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது. தவிர, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் நேற்று ஏற்றப்பட்டன.ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவிகள் கல்லுாரி வளாகத்திலிருந்து தேசிய கொடி ஏந்தி, ஊட்டி நகரில் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X