மேலுார்-மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளமுருகன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.கண்மாய்கள் ஆக்கிரமிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், கால்வாய்களை பராமரிக்காமலும் பொதுப்பணித்துறை காலம் கடத்துவதாக மேலுார் சுந்தரப்பன், சின்னமணி குற்றம் சாற்றினர். கோடை உழவு பயிரிட்டுள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு சொசைட்டியில் கடன் தர மறுப்பதாகவும், திருந்திய நெல் சாகுபடி விவசாயிகளுக்கு அரசு மானியம் ரூ. 4 ஆயிரத்தை நிறுத்திவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். விவசாயிகள் பழனிச்சாமி, மணி, கதிரேசன், ராஜமாணிக்கம், ரவி, பன்னீர்செல்வம், ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.