விதிமீறல் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை | மதுரை செய்திகள் | Dinamalar
விதிமீறல் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News



மதுரை-பொட்டலப் பொருட்கள் விதிகள்படி செயல்படாத 44 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மதுரை தொழிலாளர் உதவி (அமலாக்கம்) கமிஷனர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுவோர், பொட்டல பொருட்கள் விற்கும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறைஆய்வு செய்தது. சான்று இல்லாமல் பொட்டல பொருட்கள் விற்ற 44 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுவோரின் பெயர், முகவரி, பொருட்களின் பெயர், எடை, தயாரித்த மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, போன் எண் குறிப்பிட வேண்டும். வணிகர்கள் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும்.வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் அவர்களின் பெயர் விபரங்களை labour.tn.gov.in/ism இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X