மதுரை-மதுரை காந்தி மியூசியம், அரசு மியூசியம் சார்பில் சுதந்திர தினவிழாவையொட்டி மியூசிய வளாகத்தில் நாளை (ஆக.15) காலை 10:30 மணிக்கு 'இந்திய விடுதலை இயக்க' பொது அறிவுப்போட்டியை நடத்துகின்றன.இந்திய விடுதலை இயக்கம், காந்தி வாழ்க்கை மற்றும் சிந்தனை குறித்த போட்டி காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பரீட்சை அட்டை, பேனா, பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையுடன் வரவேண்டும். கட்டணம் இல்லை என காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார். பங்கேற்க விரும்புபவர்கள் 99941 23091 ல் தொடர்பு கொள்ளலாம்.