விதிமீறிய 'சாகசங்களை'பள்ளியில் அனுமதிக்கலாமா | மதுரை செய்திகள் | Dinamalar
விதிமீறிய 'சாகசங்களை'பள்ளியில் அனுமதிக்கலாமா
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 

மதுரை-பள்ளிகளில் விதிமீறி மோட்டார் சைக்கிளில் சாதனை நிகழ்ச்சிகள் நடத்துவது தேவையற்றது என போக்குவரத்துத் துறையினர் கருதுகின்றனர்.பள்ளி மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை செய்வதும், அவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியர், பெற்றோர் ஊக்குவிப்பதும் பெரிதும் வரவேற்கத்தகுந்ததே.

இதனால் மாணவர்களும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதுடன், திறன் மிக்க மாணவர்களும் உருவாவர்.ஆனால் அந்த ஆர்வமே ஆபத்தானதாகவும், விதிமீறியதாகவும் இருந்து விடக்கூடாது. சமீபத்தில் சொக்கிக்குளம் பகுதி பள்ளி ஒன்றின் விளையாட்டு விழாவில் ஒரே பைக்கில் 4 பேர் தொற்றிக் கொண்டு சாதனைகளை மேற்கொண்டனர்.

அதேபோல நாகமலை புதுக்கோட்டையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக ரோட்டில் நடந்த நிகழ்ச்சியிலும் மாணவர்கள் டூவீலரில் சாதனை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் மோட்டார் சைக்கிள்கள், அதுவும் கியர் வாகனங்களில் சாதனை புரிந்தது சாலை விதியை மீறியதே.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கற்பிக்கும் பள்ளிகளில் டூவீலர்களில் வருவதற்கு தடைசெய்யும் நிர்வாகங்கள், விளையாட்டுப் போட்டி, ஆண்டு விழாக்களில் இதுபோன்ற விதிமீறல் விளையாட்டுகளை ஊக்குவிக்கக் கூடாது, என வட்டார போக்குவரத்து துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X