தெருவின் நடுவிலே அடி குழாய்கள்: எலிகளால் வீணாகிறது தண்ணீர்
Added : ஆக 14, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திண்டுக்கல்: சந்தைப்பேட்டை, கிசில்வாதெரு, அப்பியர் சந்து உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் இரவில் வெளியில் வர முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை, தெருக்களில் குழந்தைகளை அச்சுறுத்தும் நாய்கள், சேதமடைந்த ரோடு, தெருவின் நடுவில் உள்ள அடி குழாய்களால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை,உப்புநீரை தேக்கி வைக்கும் தண்ணீர் தொட்டியின் அடிப்பகுதியை எலிகள் கடித்து நாசம் செய்வதால் வீணாகும் தண்ணீர் , சாக்கடைகள் உயரம் குறைவால் மழை நேரங்களில் முழங்கால் அளவிற்கு ரோட்டில் கழிவுநீர் தேக்கம் என்பன உட்பட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 37 வது வார்டு மக்கள். இது தொடர்பாக அதிகாரிகள் பார்வையிட்டு செல்கிறார்களே தவிர எவ்வித செயல்பாடுகளும் இல்லை என்கின்றனர் வார்டு மக்கள்

கொசு மருந்து அடியுங்க


கிருஷ்ணமூர்த்தி,ஓய்வு வங்கி அதிகாரி: கொசுக்கள் அதிகமாகி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து நோய் தொற்றிற்கு ஆளாக்கி வருகிறது. மழைக்காலம் என்பதால் கொசுக்கள் அதிகமாக நடமாடுகிறது. முன்பு மாநகராட்சியில் இருந்து கொசுமருந்து அடித்தனர். தற்போது அடிப்பதே இல்லை.கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தண்ணீர் குழாய்களை அகற்றுங்க

சுப்பிரமணி,யோகா ஆசிரியர் : வார்டின் சிலபகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் குழாய்கள் பயனற்று கிடக்கிறது. அதை சரி செய்யலாம். இல்லையேல் அப்புறப்படுத்த வேண்டும் .

சாக்கடையை அகலப்படுத்துங்க

குமரன், புகைபட கலைஞர்: மழை நேரங்களில் சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. இதை அகலப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.நோய் பரவும் அபாயமும் உள்ளதால் மழைக்காலம் தொடங்கும் முன் பணியை தொடங்குவது நல்லது.

நிதி வந்ததும் பணி

நித்யா, கவுன்சிலர் (தி.மு.க.,): அவ்வப்போது மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது.நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் தடைபட்டுள்ளது. நிதி வந்தவுடன்வார்டில் பணிகள் செய்யப்படும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202211:58:25 IST Report Abuse
Gopalakrishnan S திருமதி நித்யா (தி.மு.க. கவுன்சிலர் ) அவர்களே! உங்களின் ஒரே ஒரு மாதத்து லஞ்சத்தை விட்டுக் கொடுங்கள். எவ்வளவு நல்ல காரியங்கள் நடக்கும் என்று பாருங்கள் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X