'தினமலர்' சார்பில் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழ் சார்பில் திருப்பூரில் இன்று(ஆக.,14) நடந்த சுதந்திர தின பவளவிழா மெல்லோட்டத்தில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.



நாட்டின், 75வது சுதந்திர தின பவள விழாவை, மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், திருப்பூரில் மெல்லோட்டம் நிகழ்ச்சி இன்று நடந்தது. தேசப்பற்றை பறைசாற்றும் வகையில், பொதுமக்கள், இதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.





கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று காலை, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத், போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி., செஷாங் சாய், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல். ஆதிமூலம், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார்,துணை மேயர் பாலசுப்ரமணியன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் மெல்லோட்டத்தை துவக்கி வைத்தனர். முன்னதாக, கலெக்டர் வளாகத்தில் 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.




Latest Tamil News
Next News

மாணவ, மாணவியர் அணிவகுப்பு



'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவின் அலங்கார ஊர்தி; ஊர்க்காவல் படையினரின் மிடுக்கான பேண்ட் வாத்திய அணிவகுப்பு; தேசியக்கொடி ஏந்திய குதிரை வீரர்கள் அணிவகுப்பு; பள்ளி மாணவர்களின் 'ஸ்கேட்டிங்'; மராத்தான் வீரர்களின் மித ஓட்டம்; அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அணிவகுப்பு; என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் படையினரின் அணிவகுப்பு, தொழில் அமைப்பினரின் அணிவகுப்பு; பொதுநல அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், லயன்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்பினரின் சீரான அணிவகுப்புடன், கராத்தே உடை அணிந்த வீரர்கள், சிலம்பாட்ட வீரர்கள் பல்வேறு தரப்பினரும் மெல்லோட்டத்தில் பங்கேற்றனர்.




ஜான்சிராணி, பாரதியார், திருப்பூர் குமரன், நேதாஜி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் வேடமணிந்து மாணவர்கள் மெல்லோட்டத்தில் பங்கேற்றனர். இந்த மெல்லோட்டத்தில் பாரதி வித்யா பவன் 450 அடி உயரம்(110 மீ) கொண்ட தேசிய கொடியை கொண்டு வந்தனர். தேசப்பற்றை நெஞ்சில் சுமந்தபடி, தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, வீரர், வீராங்கனைகளும், எதிர்கால சந்ததியினரும் மெல்லோட்டத்தில் அணிவகுத்தனர்.

நான்கு இடங்களில், பவளக்கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், சாய் கிருஷ்ணா நுண்கலை கூடத்தின் பரத நாட்டியம் போன்ற, மேடை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மெல்லோட்டம், பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம், வளர்மதி பாலம், பார்க்ரோடு வழியாக, நஞ்சப்பா பள்ளியை காலை 8:35 மணிக்கு சென்றடைந்தது.பள்ளி வளாகத்தில், மெல்லோட்டத்தை வரவேற்கும் வகையில், 'புட்லுாஸ்' குழுவினரின் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகளும், தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கரின் சுதந்திர தின எழுச்சி சொற்பொழிவும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எல். ஆதிமூலம், வெற்றி அமைப்பு சிவராம், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குநர் குமார், கமிஷனர் கிராந்தி குமார், ராஜா சண்முகம், தொழில் அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




வானுயர பறக்கும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலுான்கள் வானில் பறக்கவிடப்பட்டன. திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின பவளவிழா உறுதிமொழி ஏற்பு, தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
'தினமலர்' நாளிதழின் இன்றைய மெல்லோட்ட நிகழ்ச்சி, வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமைந்ததாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-202205:19:58 IST Report Abuse
Kasimani Baskaran அனைத்து சொந்தங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-ஆக-202202:08:27 IST Report Abuse
BASKAR TETCHANA இந்திய மக்களுக்கும் இனிய தமிழ் மக்களுக்கும் இடையில்லாமல் பணியாற்றும் தினமலருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.ஜெய் பாரதம். .
Rate this:
Cancel
Arumugam - Hosur,இந்தியா
14-ஆக-202220:18:40 IST Report Abuse
Arumugam ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X