காய்ப்பு அதிகரிப்பால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி | தேனி செய்திகள் | Dinamalar
காய்ப்பு அதிகரிப்பால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை மரங்களில் காய்ப்பு அதிகரித்து நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், சித்தையகவுண்டன்பட்டி, தெப்பம்பட்டி, சேவா நிலையம், கதிர்நரசிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இப்பகுதியில் விளையும் முதல் தர முருங்கைக்காய் ஏஜென்சி மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில வாரங்களில் பெய்த மழை முருங்கைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது.

தற்போது முருங்கை மரங்களில் அதிகளவு பிஞ்சுகள் எடுத்துள்ளது. இன்னும் சில வாரங்களில் கூடுதலான காய்கள் வரத்து இருக்கும். தற்போது முருங்கைக்காய் தரத்திற்கு ஏற்ப கிலோ 30 முதல் 40 வரை விலை உள்ளது. அடுத்து வரும் சில மாதங்களில் முகூர்த்த சீசன் அதிகம் இருக்கும் என்பதால் முருங்கைக்காய் தேவை அதிகமாகும். விளைந்த முருங்கை காய்களுக்கு தற்போது கட்டுப்படியான விலை இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X