சகதியால் அணைகளில் வீணாகும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்காது மின்வாரியம் அலட்சியம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
சகதியால் அணைகளில் வீணாகும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்காது மின்வாரியம் அலட்சியம்
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டி: குந்தா, அவலாஞ்சி அணைகளில் அதிகளவில் சகதி நிறைந்திருப்பதால் கடந்த ஒரு வாரமாக சேமித்து வைக்க முடியாமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



நீலகிரியில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின்கீழ், 13 அணைகள், 30 தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள, 12 மின் நிலையங்களில் தினமும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. இருவாரம் தொடர்ந்து பெய்த பருவமழையால் மாவட்டத்தில் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.அணை பாதுகாப்பு கருதி குந்தா, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

பெரும்பாலான அணைகள் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளதால், தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்திக்கு ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு செல்லும் போது, சகதி காரணமாக மின் சாதன கருவிகளும் பழுதாகி உற்பத்தியில் அடிக்கடி தடை ஏற்படுகிறது.குறிப்பாக, 171 அடி கொண்ட அவலாஞ்சி அணை, 89 அடி கொண்ட குந்தா அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களில், 455 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது, இரு அணைகளில் சகதி அதிகரித்ததால் மழையின்போது அணைக்கு வந்த தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.குந்தா, அவலாஞ்சி அணைகளில் பாதி அளவுக்கு சகதி நிறைந்திருப்பதால், கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மின்வாரியம் முறையாக துார்வாராத காரணத்தால் தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில் உள்ள முக்கிய அணைகள் துார்வாருவது குறித்து சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X