'எலக்ட்ரோடெக்' கண்காட்சியில் கவரும் மின்சார வாகனங்கள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'எலக்ட்ரோடெக்' கண்காட்சியில் கவரும் மின்சார வாகனங்கள்
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

கோவையில் நடக்கும் 'எலக்ட்ரோடெக் 2022' கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளன.

கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 'எலக்ட்ரோடெக் 2022' கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது; நாளை நிறைவடைகிறது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களின் வாகன செலவை அதிகரித்து வருகிறது. எனவே, எரிபொருளுக்கு மாற்றாக மின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களில் குறிப்பாக, இரண்டு சக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் கவர்ந்துள்ளன.

கண்காட்சியில், 60 ஆயிரம் ரூபாய் முதல், 2.5 லட்சம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்து ஆண்டுகள் வரை பேட்டரியின் வாழ்நாள் கொண்ட வாகனங்கள், 70 ஆயிரம் முதல், 1.20 லட்சம் வரை விற்பனையாகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கி.மீ., வரை செல்லும் திறன் கொண்டவையாக உள்ளன. இவற்றை, ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். மணிக்கு, 25 கி.மீ., குறைந்த வேகத்தில், அதிக லோடு ஏற்றி செல்லும் இரு சக்கர வாகனங்கள் தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்திசெய்கின்றன. தவிர, ஆட்டோ, கார்கள் மக்களை கவர்ந்துள்ளன.

டாடா நிறுவனத்தின், 12 லட்சம் முதல், 24 லட்சம் வரையிலான எலக்ட்ரிக் கார்கள் இடம்பெற்றுள்ளன. மரபுசாரா எரிசக்திகளில் ஒன்றான சூரிய ஒளி மின்சக்திக்கு வரவேற்பு கூடியுள்ளது. வீட்டுக் கூரைகளில் அமைக்கப்படும் சோலார் பேனல் முதல் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் பெரும் மின் உற்பத்தி பேனல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சூரிய ஒளிக்கலன்களை அமைக்க, 40 சதவீதம் வரை அரசு மானியம் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களுடன், வீட்டுக்கு தேவையான கேபிள், லைட், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை பற்றியும் கண்காட்சி ஸ்டால்களில் விளக்கம் தருகின்றனர்.காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தொழில் சார்ந்த பார்வையாளர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருக்கு அனுமதி இலவசம். பொதுமக்களுக்கு கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X