இந்திலி ஏரியில் கிராவல் மண் திருட்டு; 2 ஜே.சி.பி., 4 டிராக்டர்கள் பறிமுதல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
இந்திலி ஏரியில் கிராவல் மண் திருட்டு; 2 ஜே.சி.பி., 4 டிராக்டர்கள் பறிமுதல்
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ஏரியில் கிராவல் மண் எடுத்த 2 ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் 4 டிராக்டர்களை பறிமுதல் செய்து, 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் ஆர்.டி.ஓ., பவித்ரா மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஏரியில் 4 டிராக்டர்களில் 2 ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கிராவல் மண் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 4 டிராக்டர்கள் மற்றும் 2 ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக இந்திலி வி.ஏ.ஓ., சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் ஜே.சி.பி., டிரைவர்கள் இந்திலி ஜே.ஜே., நகர் கார்த்திகேயன், தச்சூர் வெங்டேசன், டிராக்டர் டிரைவர்கள் தச்சூர் சின்னதுரை, சதிஷ், குமார், ஞானவேல் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.அதேபோல் ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் உலகங்காத்தான் ஆறுமுகம், பொற்படாக்குறிச்சி சின்னதுரை மனைவி ஆதிலட்சுமி, இந்திலி வெங்கடேஷ், ராமசாமி உள்ளிட்ட 4 பேர் என 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X