செஞ்சியில் 250 இடங்களில் விநாயகர் சிலை; இந்து முன்னணி கூட்டத்தில் முடிவு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
செஞ்சியில் 250 இடங்களில் விநாயகர் சிலை; இந்து முன்னணி கூட்டத்தில் முடிவு
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
Latest district News

செஞ்சி : செஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் பிரிதிவிராஜ் வரவேற்றார். மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். விஷ்ணு ராஜன் சிறப்புரையாற்றினார். நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் 250 இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழா நடத்துவது.

அனந்தபுரம், அவலுார்பேட்டை, மேல்மலையனுார் , திண்டிவனம் பகுதியில் 3ம் நாளும், செஞ்சி பகுதியில் 5ம் நாளும் வழக்கமான பாதைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது. விநாயகர் சிலை அமைக்கும் இடங்களில் 5 பேர் கொண்ட விழா குழு நியமிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர பொதுச்செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X