உப்பூரில் அரசு மருத்துவமனை; அவசர சிகிச்சை பெறமுடியாமல் மக்கள்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள, உப்பூரை சுற்றி பத்துக்கும் மேற்பட்டகுக்கிராமங்கள் உள்ளன. இங்கு பெயரளவில் துணை சுகாதார நிலையம் மட்டும் உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு 15 கி.மீ., துாரமுள்ள திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.காலவிரயத்தால் விலை மதிப்பில்லாத உயிரை இழக்க வேண்டியுள்ளது.ஆகையால் உப்பூரில் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உப்பூர் பல்வேறு கடலோர பகுதி கிராமங்களுக்கு, மைய பகுதியாகவிளங்கி வருகிறது. அதாவது மோர்ப்பண்ணை, கடலூர், காரங்காடு, முள்ளிமுனை, சித்தூர்வாடி ஆகிய பத்துக்கு மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு மீனவ தொழிலாளர்கள், ஏழை மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினர் காய்ச்சல்,வயிற்றுவலி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு கூட 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ஆர்.எஸ்.மங்கலம் அல்லது திருப்பாலைக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் நேரம், பண விரயமும், அவசர சிகிச்சைக்கு உடனடி சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது உப்பூரில் மினி கிளினிக் துவங்கப்பட்டு அப்பகுதிமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போதைய தி.மு.க., ஆட்சியில், மினி கிளினிக் மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்கள் அவசர மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, கடலுார் ஊராட்சி தலைவி முருகவள்ளி கூறுகையில்,'உப்பூரில் துணை ஆரம்ப சுகாதார வளாகம் கட்டடம் பழுதாகியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம்அமைக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் மனு அளித்துள்ளோம். உப்பூரில்அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும்,' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X