வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் பிடிபட்டனர்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அரும்பாக்கம்:அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மூவர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர்.அவர்கள், பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டி போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

இது குறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இதில் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர், தன் கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், கொள்ளையடித்த நகையுடன் காரில் தப்பி செல்ல, முருகனுக்கு உதவியதாக அவரது நண்பர் வில்லிவாக்கம் பாலாஜி, 28, சந்தோஷ் , 30, சக்திவேல் ஆகிய 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 18 கிலோ நகை மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முருகன் மற்றும் பிற கொள்ளையர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். அதேபோல், அனைத்து சுங்கச் சாவடிகளிலும், சம்பவத்திற்கு பின் கடந்து சென்ற வாகனங்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கொள்ளையர்கள் வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக, முருகனின் புகைப்படம் அனைத்து மாவட்ட மற்றும் மாநில போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.வங்கியில் நகைகள் கொள்ளை போன சம்பவம் அறிந்து, வாடிக்கையாளர்கள் நேற்று அலுவலகத்தின் முன் திரண்டு இருந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.




சினிமா 'டயலாக்'


கைதான பாலாஜி, கொள்ளை சம்பவத்திற்கு முன், அவரது 'வாட்ஸ் ஆப் - ஸ்டேடசில்' வலிமை படத்தில் இடம்பெற்ற 'இந்த உலகத்துல தப்பு, சரி எதுவும் இல்ல ப்ரோ; நாம செய்யற வேலைய நியாயப்படுத்த முடிஞ்சா அது சரி; முடியலனா அது தப்பு' என, வில்லன் பேசும் ஒரு வசனத்தை வைத்திருந்தது தெரியவந்தது.





ரூ.1 லட்சம் பரிசு

'
கொள்ளையர்களை பிடிக்கும் போலீசாருக்கு, 1 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'வங்கி கொள்ளையர் குறித்து துப்பு கொடுக்கும் பொது மக்களுக்கும், 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, டி.ஜி.பி., அறிவித்துள்ளார்.

டி.ஜி.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறை: 044 - 2844 7703 மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 044 - 2345 2324 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





நம்பிக்கை



சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, வங்கி நிர்வாகிகள் விசாரணைக்கு வந்தபோது, 'கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக' தெரிவித்தனர்.

மேலும், 'போலீசார் நகைகளை கண்டுபிடித்து தந்தவுடன், அவை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லை என்றால், அதற்கு உண்டான இன்சூரன்ஸ் தொகை பெற்றுத் தரப்படும்' என, தெரிவித்தனர்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X