'ஸ்டான்லி' முன்னாள் மாணவர்கள் சந்திப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
'ஸ்டான்லி' முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
Latest district News

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள், 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாடினர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில், 1971ல் மருத்துவம் பயின்று முடித்தவர்கள் தமிழகம், பிற மாநிலம், வெளிநாடு என, மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பர். மாணவராக கல்லுாரியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பொன்விழா கொண்டாடினர்.
இதற்காக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில், 70 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என, 120 பேர், நேற்று கூடினர். கல்லுாரி பருவத்தில் நண்பர்களாக பழகிய நினைவுகள், கல்லுாரி கால அனுபவங்கள் என, உணர்ச்சி பொங்க நெகிழ்ந்து பேசினர்.

ஒவ்வொருவரின் குடும்பத்தினரும் தங்களின் தொழில் முன்னேற்றம், வாழ்க்கைச் சூழலை பகிர்ந்து, குதுாகலமடைந்தனர். ஒருவரின் பேரக் குழந்தைகளை, மற்றவர் பேரக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, நட்புணர்வு ஏற்படுத்தினர். அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.

இதில், டாக்டர்கள் முரளிதரன், ஜெயராஜா, மணி ஆகியோர் கூறியதாவது:தென்னிந்தியாவில், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி, இரண்டாவதாக துவக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன், அதில் படித்தோம். ஏழை மாணவர்களாக சேர்ந்த நாங்கள், இன்று நல்ல நிலையில் உள்ளோம். மாணவ பருவ, பொன் விழா கொண்டாடுகிறோம். மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு மருத்துவம் பயிற்றுவித்த டாக்டர்களை கவுரப்படுத்துகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X