'யு - 19' கிரிக்கெட் போட்டிகள்செங்கை, திருவள்ளூர் அபாரம்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை:மாவட்டங்களுக்கு இடையிலான, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி யில் செங்கல்பட்டு, திருவள்ளூர் அணியினர் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும், மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, மாநிலத்தின் பல மாவட்டங்களில் நடைபெறுகிறது.நேற்று முன்தினம் மதுரையில் நடந்த போட்டியில் செங்கல்பட்டு அணியும், திண்டுக்கல் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில், முதலாவதாக 'பேட்டிங்' செய்த செங்கல்பட்டு அணி, 49.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 219 ரன்கள் குவித்தது. சூர்யா 60 ரன்களும், ஸ்ரீஹரி 54 ரன்களும் எடுத்தனர்.வெற்றி பெறக்கூடிய இலக்கு என்றாலும், செங்கல்பட்டு அணியினரின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாத திண்டுக்கல் அணி, 37.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 185 ரன்னுக்குள் சுருண்டது. செங்கல்பட்டு அணி, 34 ரன்களில் வெற்றி பெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி அணிகள் மோதின. இதில் முதலில் 'பேட்டிங்' செய்த திருவள்ளூர் அணியின் பேட்ஸ்மேன்கள், கள்ளக்குறிச்சி அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, பந்துகள் எல்லைக்கோட்டை அடிக்கடி தொட்டன.
மேலும், 50 ஓவர்கள் முடிவில், திருவள்ளூர் அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 290 ரன்கள் எடுத்தது. கவுரி சங்கர் 135 ரன்கள் குவித்தார். பின் ஆடிய கள்ளக்குறிச்சி அணி, சவாலான இலக்கை எட்ட முடியாமல், 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 145 ரன்களுக்குள் சுருண்டது. திருவள்ளூர் அணி 145 ரன்களில் அபார வெற்றி பெற்றது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X