கோவை:கோவையில், மார்க் 1 ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில், மணப்பெண்கள் பேஷன்ஷோ நிகழ்ச்சியும், தென்னிந்தியாவில் முதல் முறையாக திருமண தொழில் துறை விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து காஞ்சிபுரம் ஜி.ஆர்.பி., சில்க்ஸ், ஜெ.ஜெ., ஜூவல்லரி மார்ட் பாண்டிச்சேரி, ரெசிடென்சி ஓட்டல் சார்பில், கொடிசியா அரங்கில் மெகா திருமண கண்காட்சி கடந்த 13ம் தேதி தொடங்கியது.இன்றும் நடைபெறும் இக்க்கண்காட்சியில், திருமணம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. இதில் திருமண நகைகள், பட்டுசேலைகள், நவநாகரிக ஆடைகள், திருமண அலங்காரம், சமையல், ஆட்டோமொபைல், புகைப்படக் கலைஞர்கள் என அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் அரங்குகளை அமைத்துள்ளனர். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.