பிரைட் பப்ளிக் பள்ளிவிளையாட்டு விழா | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பிரைட் பப்ளிக் பள்ளிவிளையாட்டு விழா
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்:திருப்பூர், விஜயாபுரம் பிரிவு பிரைட் பப்ளிக் பள்ளியின் விளையாட்டு விழா கோலாகலமாக நடந்தது.தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கபடி அசோசியேஷன் பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம், திருப்பூர் பேட்மின்டன் சங்க செயலாளர் மோகன்குமார், அன்பு அறக்கட்டளை தலைவர் மோகன், உப தலைவர் உத்தமன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.பள்ளியின் முதல்வர் பிரபா குமாரி, அன்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதந்திர தின விழா குறித்து பேசினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும், புத்தகமும் வழங்கப்பட்டது.மாணவர்கள், நான்கு அணிகளாக பிரிந்து, சிறப்பாக அணிவகுப்பு செய்தனர். சிறப்பு விருந்தினர்கள், அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புளூட்டானியர் அணி, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. கேலியம் அணி இரண்டாம் இடத்தையும், ரோடியம் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X