தேசிய கொடியேந்தி 75 கி.மீ., ஓட்டம்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்:திருப்பூர் அம்மாபாளையத்தைச்சேர்ந்த கைலாசநாதன் -- மீனாட்சி சுந்தரி தம்பதியின் மகன் யுவான் கார்த்திக், 22. கைலாசநாதன், வியாபாரமும், தாய் மீனாட்சி சுந்தரி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் உள்ளனர்.பொறியியல் பட்டதாரியான யுவான் கார்த்திக், கோவையில் உள்ள ராணுவ அதிகாரிகளை உருவாக்கும் மையத்தில் இணைந்து பயிற்சி பெற்றார். கடந்த ஏப்., மாதம் எஸ்.எஸ்.பி., கடற்படை தேர்வு எழுதிய யுவான் கார்த்திக், வெற்றிபெற்றார். இந்த தேர்வில், தமிழக அளவில் தேர்வான ஒரே நபர் என்கிற பெருமையையும் பெற்றார்.இவர், வரும் செப்., 5ல் இந்திய கடற்படையில், 'சைபர்' பிரிவு அதிகாரியாக இணைய உள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யுவான் கார்த்திக், கோவையிலிருந்து திருப்பூருக்கு நேற்று, 75 கிலோ மீட்டர் துாரம், தேசியக்கொடி ஏந்தியவாறு ஓடிவந்தார்.கோவை ரேஸ்கோர்ஸில் நடந்த நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கொடி அசைத்து ஓட்டத்தை துவக்கிவைத்தார். மாலை, 5:45 மணிக்கு திருப்பூரை வந்தடைந்த இளம் கடற்படை அதிகாரி யுவான் கார்த்திக், ரயில்வே ஸ்டேஷன் அருகே குமரன் நினைவிடம் வந்தடைந்தார்.அங்கு, திருப்பூர் குமரனின் வாரிசுகளிடம் தான் ஏந்திவந்த தேசிய கொடியை ஒப்படைத்தார். குமரனின் பேரன்கள் சதானந்தம், சிவானந்தம், கணேசன், கொள்ளுப்பேரன் நிர்மல்ராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தேசிய கொடியை பெற்றுக்கொண்டு, கடற்படை அதிகாரியாக உள்ள யுவான் கார்த்திக்கை வாழ்த்தினர்.யுவான் கார்த்திக் கூறுகையில், 'உயிர் பிரியும் தருவாயிலும் கையில் ஏந்திய கொடியை இறுகப்பிடித்த குமரன் பிறந்த மண் திருப்பூர். அவரின் தியாகத்தையும், தேசப்பற்றை வளர்க்கும் வகையிலுமே, கோவையிலிருந்து திருப்பூருக்கு, 75 கி.மீ., துாரம் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ஓடிவந்தேன்; குமரனின் வாரிசுகளிடம் கொடியை ஒப்படைத்தேன்,' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X