கம்பீர அணிவகுப்பு... பொங்கிய தேசப்பற்று! சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் பொதுமக்கள் மகா சங்கமம்
Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்: திருப்பூரில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்தனர்.l 'வனத்துக்குள் திருப்பூர்' வாகனத்தில், தேசப்பற்று மிக்க பாடல்கள் ஒலிக்க, 'திருப்பூர் ஜாவா யெஸ்டி கிளப்' வீரர்களின், 'டூ வீலர்' அணிவகுப்பு, 'ஸ்கேட்டிங்' அகாடமி மாணவ, மாணவியர், குமரன் மருத்துவமனையின் பைக் ஆம்புலன்ஸ் ஆகியன அணிவகுத்து ஊர்வலத்துக்கு முன் சென்றனர்.

திருப்பூர் மாவட்ட, மாநகர ஊர்க்காவல் படையை சேர்ந்த, 30 வீரர்கள், பேண்டு வாத்தியம் இசையுடன், மிடுக்காக அணிவகுத்து சென்றனர்.l மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர், அரசு வழங்கிய, இணைப்பு சக்கரம் பொருத்திய 'டூ வீலரில்' தேசியக்கொடியை கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.l உடல் தானம் குறித்து, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணம் செய்து வரும், 'அவார்னஸ் அப்பா' எனப்படும் சிவசுப்பிரமணியம், நேற்று முதல் நபராக பங்கேற்றார்.l பஞ்சாப் 'டோலி' இசைக்குழுவினரின், உற்சாகமூட்டும் துள்ளல் இசையுடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், 300க்கும் மேற்பட்டவர்கள், சீருடையுடன் பங்கேற்றனர்.

'லகு உத்யோக் பாரதி' அமைப்பை சேர்ந்த, 500 பேர், சீருடை அணிந்து, தேசியக்கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.l திருப்பூர் 'விவித் பேஷன்ஸ்' ஊழியர்கள், திருப்பூர் ஹார்ஸ் ரைடிங் கிளப், திருப்பூர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிட்னஸ் அகாடமி உறுப்பினர்கள், தேசிய கொடியை கையில் ஏந்தி, வெள்ளை 'டி-சர்ட்' அணிந்து 'வந்தே மாதரம்' என முழங்கியபடி சென்றனர்.

திருப்பூர் 'டெக்பா' சங்க தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள்; திருப்பூர் ஒசைரி வியாபாரிகள் சங்கத்தினர், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.l திருப்பூர் மாநகராட்சியின், 22வது வார்டு, கொ.ம.தே.க., சார்பில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரையில், தீரன் சின்னமலை வேடமிட்ட வீரர் அமர்ந்து வந்தார்;

அத்துடன், தேசியக்கொடி ஏந்தியபடியும் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.l திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, சிகரங்கள் அறக்கட்டளை அமைப்பினர், கே.எஸ்.சி., பள்ளி நடைபயிற்சி சங்கத்தினர், திருப்பூர் வடக்கு தோட்டம் நடைபயற்சி நண்பர் சங்கத்தினர், பேனர்களுடன் பங்கேற்றனர்.l ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட, திருப்பூர் நகரப்பகுதியில் பணியாற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள், சீருடையில் பங்கேற்றனர்.l திருமுருகன்பூண்டியில் இயங்கும் சுவாமி விவேகானந்த சேவாலயத்தை சேர்ந்த மாணவ, மாணவியரின் அதன் நிறுவனர் செந்தில்நாதன் தலைமையில், சுவாமி விவேகானந்தர், பாரதியார், வேலுநாச்சியார், ஜான்சி ராணி, நேதாஜி போன்ற வேடமணிந்து உற்சாகமாக சென்றனர்.

பள்ளி மாணவ, மாணவியர், ரிப்பன் கட்டிய சிலம்பாட்டம் ஆடியபடியும், கராத்தே அகாடமி மாணவர்கள், சீருடையுடன் கராத்தே பயிற்சி எடுத்தபடியும் சென்றது, காண்போரை கவர்ந்தது.l 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில், எட்டு ஆண்டுகளில், 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பசுமை திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில், அலங்கார ஊர்தியும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

ஹிந்து முன்னணி சார்பில், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த, 90 சுதந்திர போராட்ட வீரர், வீராங்கனைகள் போட்டோவுடன், 'பேனர்'களுடன், ரோட்டின் பக்கவாட்டில் அணிவகுத்தனர். சுதந்திர போராட்ட தியாகிகள், திருப்பூர் குமரன் ஆகியோரின் படங்களுடன், இந்து முன்னணியின், உயரமான அலங்கார ஊர்தி ஒன்றும் அணிவகுப்பில் பங்கேற்றது.l திருப்பூர் 'கிட்ஸ் கிளப்' பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், கிராமிய தப்பாட்டம் அடித்தபடியும், நடனமாடியபடியும் மெல்லோட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்ட பி.எம்.எஸ்., மின் தொழிலாளர் சங்கத்தினர், பேனர் பிடித்தபடி, குடும்பத்துடன் பங்கேற்று, 'வந்தே மாதரம்...' என்று முழங்கியபடி சென்றனர்.மெல்லோட்டம் நிகழ்ச்சி, காலை, 7:00 மணிக்கு துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 6:30 மணிக்கே, பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும், கலெக்டர் அலுவலகத்துக்கு வரத்துவங்கினர்.l திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த, 76 வயதுள்ள சதாசிவம் என்ற முதியவர், தேசியக்கொடியுடன் வந்திருந்தார். பொன்விழா, வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, 3வதாக, பவள விழா மெல்லோட்டத்தில் பங்கேற்பதாக பெருமையாக கூறினார்.

காலை, 5:20 மணிக்கே, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான, 100 போலீசார் களத்துக்கு வந்தனர்.l மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பிச்சை தலைமையிலான, பணியாளர்கள், சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.l திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்ற சமூக சேவகர், உடலில் தேசியக்கொடி போல் பெயின்டிங் செய்தபடி, தேசியக்கொடியை கையில் ஏந்தி, முதல் நபராக கலெக்டர் அலுவலகம் வந்தார்; பொன்விழா, வைரவிழா ஓட்டங்களில் பங்கேற்று, 3வதாக பவள விழாவில் பங்கேற்பதாகவும், நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கவும் தயாராக இருப்போம் என்றும் சூளுரைத்தார்.l திருப்பூர், பிச்சம்பாளையத்தை சேர்ந்த மரம் ஐயப்பன், 23 ஆண்டுகளாக, மரம் வளர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நேற்றம், உடலில் பச்சை அங்கியில் மரக்கன்றுகளை சுமந்தபடி, இந்திய வரைபடத்தை ஏந்தியபடியும் பங்கேற்றார்.l கோவை இந்துஸ்தான் கல்லுாரியின், 10 பேர் அடங்கிய பேண்டு வாத்திய குழுவினர், பேண்டு வாத்திய கருவிகளுடன், காலை, 6:00 மணிக்கே வந்துவிட்டனர்.l கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞரணியினர், பச்சை துண்டு அணிந்தவாறு, சிலம்பாட்டம், தாரை தப்பட்டை முழங்க, எழுச்சியுடன் பங்கேற்றனர்.l மெல்லோட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, கலெக்டர் அலுவலகம், தென்னம்பாளையம் மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி சிக்னல், நஞ்சப்பா பள்ளி ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.இதற்கான ஏற்பாடுகளை ரேவதி மருத்துவமனை, ஸ்ரீகுமரன் மருத்துவமனை, சுகன்சுகா மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.450 அடி நீளத்திற்கு

தேசிய கொடிதிருப்பூர், காங்கயம் ரோடு, பாரதி வித்யா பவன் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், 450 அடி நீள தேசியக்கொடியை உயர்த்தி பிடித்தபடி மெல்லோட்டத்தில் பங்கேற்றனர். தேசிய கொடியை சுமந்து சென்றதாலோ என்னவோ, வந்தேமாதரம் என மாணவ, மாணவியர் முழங்கி சென்றது சுதந்திரத்தின் மேன்மையை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.மெல்லோடத்தில் பங்கேற்ற மற்றும் பார்வையிட்ட பொதுமக்கள், 450 அடி மூவர்ண கொடியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். பலரும், பள்ளிக்கும், மாணவ, மாணவியருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X