அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 

காங்கேயம்;காங்கேயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் புகுந்து 20 பவுன் நகை, பணம் ரூ.10 ஆயிரம் ஆகியனவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காங்கேயம் அய்யாசாமி நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (40). காங்கேயத்தில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 10 மணியளவில் தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, மதியம் 2:00 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் ஆகியன திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், காங்கேயம் போலீசாரை் வழக்குப்பதிவு செய்து, திருட்டு போன வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றாவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X