சர்வதேச அளவில் போட்டி போடும் இந்தியா: 'காமன்வெல்த்' பொதுச்செயலாளர்
Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பொள்ளாச்சி: ''பொருளாதாரம், தொழில்நுட்பம் என பலவகைகளில் தன்னிறைவு பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அளவில் போட்டி போடுகிறது,'' என, 'காமன்வெல்த்' அமைப்பின் பொதுச்செயலாளர் பட்ரீசியா ஜெனட் கூறினார்.

கோவை ஈஷா அறக்கட்டளையின்கீழ் செயல்படும், 'மண் காப்போம் இயக்கம்' சார்பில் நேற்று, பொள்ளாச்சி சரளைப்பதியில், இயற்கை விவசாயம் குறித்த விளக்கக்கூட்டம் நடந்தது.இதில், 'காமன்வெல்த்' அமைப்பின் பொதுச்செயலாளரான ஸ்காட்லாந்தை சேர்ந்த பட்ரீசியா ஜெனட், அமைப்பின் அதிகாரிகள் மற்றும் கோவை ஈஷா வேளாண் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.




பட்ரீசியா ஜெனட் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து நாடுகளும், 'கோடு ரெட்' எனப்படும் மோசமான, அபாயகரமான பருவநிலை மாற்றத்தை சந்தித்து வருகின்றன. பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுவதை தடுக்க, அனைவரும் களமிறங்க வேண்டிய நேரமிது. நீடித்த மற்றும் நிலையான வருமானம் பெறவும், மண் வளத்தை காக்கவும் பல அடுக்குப்பயிர் சாகுபடிமுறை பெரிதும் உதவுகிறது.

அதிலும் அதிகப்படியான மரப்பயிர்களுக்கு முக்கியத்துவம் தருவது மண் வளத்தை பெருக்கும். இந்தியா கடந்த, 75 ஆண்டுகளில் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் என பலவகைகளில் முன்னேறி தன்னிறைவு பெற்றுள்ளது. சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் போட்டி போடுகிறது.

மிகச்சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தடுப்பூசி ஒதுக்கீட்டில் மிகவும் பாராட்டுக்குரிய நாடாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X